பழங்குடியினரின் இடத்தை ஆக்கிரமித்த ஈஷா- உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் இயக்கத்தினர் கைது



கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா மையத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 44 ஏக்கர் நிலங்களை மீட்டு பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கக் கோரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1971ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கோவை முட்டத்துவயல் பகுதியில் முத்துச்சாமி (அ) அமெரிக்க கவுண்டர் என்பவரால் பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 44 ஏக்கர் நிலம் பட்டா செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.



இதைத்தொடர்ந்து, ஈஷா அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்டு பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் குடியேறும் போராட்டம் வெள்ளியன்று (இன்று) நடைபெற்றது.



கோவை இருட்டுப்பள்ளம் பகுதியில் இருந்து பேரணியாக வந்த அவ்வமைப்பினரை செம்மேடு பகுதியின் முன்பாக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து, தமிழ்புலிகள் அமைப்பின் தலைமை நிலைய செயலாளர் முகிலரசன் கூறுகையில், முதற்கட்டமாக குடியேறும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்டமாக மக்களைத் திரட்டி ஈஷா அமைத்துள்ள வேலிகளை பிடுங்கி எறியும் போராட்டம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி தமிழ்புலிகள் அமைப்பினர் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக ஏராளமான காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...