நீலகிரி மாவட்டம் குன்னூர் உதவி ஆட்சியருக்கு, 6 மாதம் சிறை- பழனி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உதவி ஆட்சியருக்கு, 6 மாதம் சிறை தண்டனை வழங்கி பழனி விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மருதசாமி (65). இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழனி துணை வட்டாட்சியராக இருந்த பாஸ்கரன் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அப்போது பாஸ்கரன் சொந்த வீடு கட்டி வருவதாகவும், பணம் பற்றாக்குறையாக இருப்பதால் ரூ. 3 லட்சம் கடனாக தரும் படியும் மருதசாமியிடம் தெரிவித்து கடன் வாங்கியுள்ளார். கடன் தொகைக்கு வங்கிக் காசோலையை ஈடாக தந்துள்ளார். பின் வீடு கட்டி வீட்டை காலி செய்த பின்பும் கடனை திருப்பித் தரவில்லை. இதையடுத்து, காசோலையை வங்கியில் வழங்கிய போது பணம் இல்லாமல் திரும்பி விட்டது.

இதனால் மருதசாமி, பழனி விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டன், பாஸ்கரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். பாஸ்கரன் தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் உதவி ஆட்சியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...