தெரு கூத்தாடிகளின் குழந்தைகளுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய ஈர நெஞ்சம் அறக்கட்டளை!


உலக அளவில் நாளை குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாறுவேடப்போட்டி, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையை சேர்ந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் தெருவில் சாட்டையால் அடித்தும், சாகசம் நிகழ்த்தியும் சம்பாதிக்கும் தெரு கூத்தாடிகளின் குழந்தைகளுடன் ஆடிப்பாடி இன்று குழந்தைகள் தினம் கொண்டாடினர். 



ஈர நெஞ்ச அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வர்கள் அந்த பிள்ளைகளுக்கு புத்தாடைகள், பரிசுப்பொருட்கள், திண்பண்டங்களை கொடுத்து அவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடினர். குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.



இது குறித்து,  சின்ன கண்ணய்யா என்பவர் கூறுகையில், 'எங்கள் போன்றோரை இந்த சமூகத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை. எங்களுக்கு பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் கனவாகிப்போனது. தினமும் சாலைகளில் சாட்டைகளால் எங்களை நாங்களே அடித்து கொண்டும், பிளேடு, கத்தி போன்றவற்றால் உடலை கீறிக்கொண்டும் சம்பாதித்து வருகிறோம். எங்களைப் போல் கோவையில் 35 குடும்பங்கள் உள்ளன.



பள்ளி பருவம் முடிக்கும் எங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர்க்க சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் அரசு எங்களுக்கு சாதி சான்றிதழ் தர மறுத்து, பாட்டன் காலத்து ஆவணங்களை கேட்கின்றனர்.வீடில்லாத எங்களிடம் ஏது ஆவணங்கள்? இந்த வலியும், வேதனையும் எங்களோடு போகட்டும். அடுத்த தலைமுறையினராவது படித்து நல்ல வேலைகளில் சேர வேண்டும். அதற்கு அரசு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று சின்ன கண்ணய்யா கண்ணீர் மல்க  கூறினார்.

தொடர்ந்து ஈர நெஞ்சம் அறக்கட்டளையின் நிர்வாகி மகேந்திரன் கூறியதாவது :- 

தெருவில் கூத்தாடி பிழைப்பு நடத்துபவர்களுக்கும் குழந்தைகள் உண்டு. அவர்களும் கொண்டாடப்பட வேண்டிய மனித பிறப்புகளே. ஆனால் சமூகத்தில் யாரும் அவர்களை கண்டுகொள்வதில்லை.இதனால் இன்று அவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாட முடிவு செய்தோம். அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கி மகிழ்வித்தோம். அரசு அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காதது, குழந்தைகளின் கல்வியை பாதிப்பதாக கூறுகின்றனர்.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளத்தில் எத்தனை சோகம் இருந்தாலும்.....உடலை சாட்டையால் அடித்து பிழைக்கும் இந்த குழந்தைகளை இந்த தினத்தன்று நினைவுகூர்ந்து மகிழ்வித்த ஈர நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்! ஜாதி சான்றிதழ் இல்லாததால் படிக்க வழியில்லாமல் இருக்கிறோம் என கூறும் அந்த குழந்தைகளின் பெற்றோரின் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தீர்த்து வைத்தால், அடுத்த ஆண்டு குழந்தைகள் தினம் இவர்களுக்கு ஒரு விடிவெள்ளியாய் அமையும்!  



Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...