இந்திய மருத்துவர் சங்கத்தை கலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

இந்திய மருத்துவர் சங்கத்தை கலைத்து தேசிய மருத்துவர் சங்கத்தை உருவாக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் இந்திய மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவர் சங்கத்தை கலைக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய மருத்துவர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகம் முன்பாக அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட இந்திய மருத்துவ சங்கத்தை கலைத்து, தேசிய மருத்துவச் சங்கத்தை உருவாக்க மத்திய அரசு முயல்வதாகவும், அவ்வமைப்பில் 20 உறுப்பினர்களில் 15 பேரை நியமன முறையில் மருத்துவர் அல்லாதவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதிகரித்து வரும் மருத்துவர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இந்திய மருத்துவ சங்கத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...