கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்பதால் சிக்கல் - மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் எழுபது டன் உருளைக்கிழங்கு தேக்கம்


கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்பதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் எழுபது டன் உருளைக்கிழங்கு விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.



நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக் கிழங்குகள் அங்குள்ள விவசாயிகளால் லாரிகள் மூலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு கொண்டுவரப்படும். தினசரி இப்படி டன் கணக்கில் கொண்டு வரப்படும் இந்த உருளைக் கிழங்குகள் பின்னர் இடைத்தரகர்கள் யாருமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் மொத்த வியாபாரிகளிடம் நேரிடையாக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு கூட்டுறவுத்துறை அதிகாரிகளால் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும்.

இந்நிலையில் நேற்று முதல் கூட்டுறவு சங்கத்தில் இனி பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டவுடன் உருளைக்கிழங்கு விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நூறு ரூபாய் நோட்டுக்களின் தட்டுப்பாடு காரணமாக உருளைக்கிழங்கை வாங்க எந்த மொத்த வியாபாரிகளும் வரவில்லை. இதனால் விவசாயிகள் கொண்டுவந்த உருளைக்கிழங்குகள் விற்பனையின்றி தேங்கிவிட்டன. 



இன்று ஒரு நாளில் மட்டும் எழுபது டன் வரை உருளைக்கிழங்கு தேங்கியுள்ளதாகவும், இவை தேங்கினால் அழுகிவிடும் என்பதால் தாங்கள் கடும் இழப்பிற்கு ஆளாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், அத்தியாவசிய மற்றும் அழுகும் பொருட்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு தேவை என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...