கோவை மாநகராட்சியும் அறம் அறக்கட்டளையும் இணைந்து குழந்தைகள் உதவி மைய அலுவலகம் துவக்கம்

கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ஸ்மார்ட் ஸ்கூல்ஸ் திட்ட மையத்தின் அலுவலக திறப்பு விழா மாநகராட்சி ஆணையர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் வியாழனன்று (இன்று) ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

குழந்தைகள் உதவி மையம்:-

கோவை மாநகராட்சியின் சார்பில் குழந்தைகள் உதவி சேவை எண் 81900 00300 செயல்பட்டு வருகிறது. இதற்கான உதவி மையத்தை அறம் பொதுநல அறக்கட்டளையின் குழு நிர்வகிக்கும். அந்த குழுவில் மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், சமூக சேவகர்கள் மற்றும் கல்வியாளர்கள் இம்மையத்திற்கு வரும் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு ஏற்ப ஆலோசனைகளும் மற்றும் தீர்வுகளை நோக்கிய வழிமுறைகளும் இலவசமாக பரிந்துரைப்பார்கள்.

கோவை மாநகராட்சி பள்ளியில் இந்த மையம் செயல்படுவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.



ஸ்மார்ட் ஸ்கூல்ஸ் திட்ட மையம்:-

கோவை ஸ்மார்ட் நகரம் ஆவதால் கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து கணேசபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 

இப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள், நவீன கற்பிக்கும் முறைகள், சிறந்த பள்ளிவளாக கட்டமைப்பு வசதிகள், பசுமை வளாக திட்டங்கள், காய்கறி மற்றும் பூந்தோட்டம், ஆரோக்கியமான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவை அனைத்தும் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், அறம் பொதுநல அறக்கட்டளையின் பல்வேறு சமூகநல  பணிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ''ஹாப்பி சைல்ட் மற்றும் ஸ்மார்ட் ஸ்கூல்'' வெற்றி படி திட்டங்கள் நாட்டின் சிறந்த 100 திட்டங்களில் skoch award'' பெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...