500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்



500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு முன்னறிவிப்பின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களிலும் போதுமான தொகை இல்லாமல் பொதுமக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 

இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கில் தொடர்ந்து செயல்படும் மத்திய பாஜக மோடி அரசைக் கண்டித்து இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உருவப் படத்தை காலணியால் அடித்தும், தங்களது பணப்பையில் இருந்து தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் போன்ற நகல் காகிதத்தை எடுத்து கிழித்து வீசி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...