டிசம்பர் இறுதிக்குள் பண பிரச்சனை தீராவிட்டால் பிரதமருக்கு தூக்கு கயிறு அனுப்ப வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா முடிவு



கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் டிசம்பர் இறுதிக்குள் தற்போது நிலவும் பண பிரச்சனை தீராவிட்டால் பிரதமர் மோடிக்கு தூக்குக் கயிறு அனுப்பும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தை வெள்ளியன்று (இன்று) மாலை வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பொது மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டி இருப்பதாக குற்றம்சாட்டினர்.

பெரு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட 7 லட்சம் கோடி பணம் வாராக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய வங்கிகளை காப்பாற்றவே மத்திய அரசு இந்த நடவடிக்கையினை எடுத்து இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் டிசம்பர் இறுதிக்குள் சரியாகிவிடும் என பிரதமர் மோடி தெரிவித்து இருப்பதாகவும், பணப்பிரச்சனை டிசம்பர் இறுதிக்குள் தீரவில்லை என்றால் பிரதமர் மோடிக்கு தூக்குக் கயிற்றை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் தமிழக பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் சமரசப் படுத்தியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...