சிங்காநல்லூர் குளக்கரையில் பனைமர நாற்றுப்பண்ணை மையம் திறப்பு

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் பனைமர நாற்றுப்பண்ணை மையம் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.



இம்மையம் குளக்கரையில் மரக்கன்றுகளை அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. 18 ஜூன் 2016ம் ஆண்டு கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் குளத்தை மறுசீரமைக்கும் திட்டம் தொடங்கியது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார். 



இத்திட்டத்தில், குளங்களை பாதுகாப்பதற்கும், குளத்தின் மண் அரிப்பை தடுத்து வளப்படுத்துவதற்கும் குளத்தை சுற்றி பனை மரங்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு பனை மரம் நாற்றுப்பண்ணை மையம் குளத்தின் அருகில் திறக்கப்பட்டது.



இதன் மூலம் குளத்தை சுற்றி மரக் கன்று நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இன்று சிங்காநல்லூர் குளத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் மரக்கன்றை நட்டு வைத்தார். இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...