சரக்கு விமானத்தில் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர முடிவு

புதிய ரூபாய் நோட்டுகளை சரக்கு பெட்டக லாரிகளில் எடுத்து வருவதற்கு காலதாமதமாவதால், சரக்கு விமானத்தில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் நாசிக், மைசூரில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. சரக்குப் பெட்டக லாரிகளில் வரும் இந்த பணம் ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்தில் இறக்கப்பட்டு, அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.

சரக்கு பெட்டக லாரிகளில் ரூபாய் நோட்டு கொண்டு வருவதற்கு ஓரிரு நாள்கள் ஆவதால் பணம் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க சரக்கு விமானங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன் மூலம் சுமார் ஒரு மணி நேரத்தில் பணம் சென்னை வந்து சேர்ந்து விடும்.

இதன்படி, திங்கள்கிழமை முதல் இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- ரிசர்வ் வங்கிக்கு பணம் தேவையான அளவு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் சென்னையில் இயங்கும் 2 ஆயிரம் வங்கிக் கிளைகளுக்கு பிரித்து அனுப்புவதில்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் எடுத்து வந்தால் தாமதம் இல்லாமல் விரைந்து வங்கிக் கிளைகளுக்கு அனுப்ப முடியும்.

முன்பு தனியார் வாகனங்களிலும் பணம் எடுத்து செல்லப்பட்டது. ஆனால் இப்போது அரசு வாகனங்களிலும், வங்கி கிளையில் இருந்து நேரடியாக வந்தும் பணங்களை எடுத்து செல்வதாலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...