38-வது வார்டுப் பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 38-வது வார்டுக்குட்பட்ட பீளமேடு பயனியர் மில் சாலை பகுதியில் திங்களன்று (இன்று) கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தெளித்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த தேவையில்லாத பொருட்களையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், சி.எம்.சி. காலனியில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நகர்நல மருத்துவமனையையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, பீளமேடு பகுதிக்குட்பட்ட பாரதி காலனி 2-வது வீதியில் மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, உதவி ஆணையர் சரவணக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...