மின்சாரம் வேண்டாம், சமையல் எரிவாயு வேண்டாம், குடிநீர் வேண்டாம்.! கோவையில் ஓர் சூழல் ஆர்வலர்

அடிப்படை தேவைகள் என்பவை ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதவை. இவைகளின்றி இப்பூவுலகில் வாழ்வது மிக கடினமான காரியம். அதனால், குடிநீர், மின்சாரம், சமையல் எரிவாயு போன்றவற்றை மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டு மக்களுக்கு மானியத்துடன் வழங்கி வருகிறது. அரசு வழங்கும் இந்த அத்தியாவசிய பொருட்கள் எதுவுமே தனக்கு வேண்டாம் என்றும், அவற்றை தானே இயற்கை முறையில் உற்பத்தி செய்துகொள்வதாகவும் கூறுகிறார் கோவையை சேர்ந்த ஸ்ரீதரன்.

மேலும், குடும்பத்தின் தேவைபோக மீதம் உள்ள மின்சாரத்தை, மின்சார வாரியத்திற்கே விற்பனை செய்வதாகவும் பெருமை கொள்கிறார் இந்த சூழல் ஆர்வலர். கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். படிப்பின் மீதான ஆர்வம் குறைந்ததால் 8வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்ட இவர், தன் குடும்பத் தொழிலான பால் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும்  பணியை மேற்கொண்டார்.



மின்சார உற்பத்தி

சிக்கனம், ஆர்வம் இந்த இரண்டையும் கோட்பாடுகளாக வைத்துக் கொண்டு சிறு சிறு முயற்சிகளின் படி குடும்ப செலவை குறைக்க தொடங்கினார். இதன் முதல் முயற்சி தான் சோலார் மின்சாரம் தயாரிப்பு. கடந்த 2007-2009  தமிழகத்தில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு தொழில்கள் இருளில் மூழ்கின. அப்போது, தனது வீட்டின் மாடியில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் எடுக்க தொடங்கினார்.



வீடுகளில் தயாரிக்கும் மின்சாரத்தை அரசுக்கு விற்கலாம் என்று கடந்த 2012ம் ஆண்டு தமிழக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தை 2014ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் நடைமுறைக்கு கொண்டுவந்தது. அன்று முதல் இன்று வரை மாதத்திற்கு 350 முதல் 450  யூனிட் மின்சாரத்தை தமிழக மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்து வருகிறார்.



ஒரு நடுத்தர வர்கத்தை சேர்ந்த குடிமகன் அரசுக்கு மின்சாரம் கொடுப்பது எளிதல்ல.வீட்டுக்கூரையின் மீது விழும் மழை நீரை நிலத்தடியில் புகுத்த வீடுகளில் மழை நீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தியது. ஆனால், தனது அறிவை உபயோகித்த ஸ்ரீதரன், அந்த மழைநீரை மினரல் வாட்டருக்கு இணையான குடிநீராக வடிகட்டி தனது வீட்டின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

பயோ-கேஸ்

அத்தியாவசிய தேவைகளை அரசிடமிருந்து பெறாமல் இயற்கை ஆற்றல்களை தனக்கு தேவையான ஆற்றல்களாக உருமாற்றி பயன்படுத்திவரும் ஸ்ரீதரின் அடுத்த முயற்சிதான் பயோ-கேஸ் தயரிப்பு.



அழுகிப்போன காய்கறிகளையும், மாட்டு சாணத்தையும், நாள்பட்ட பால் பொருட்களையும் கொண்டும் உருவாக்கிய சமையல் எரிவாயுவில் இருந்து சமையல் செய்து காட்டி அசத்திய ஸ்ரீதரன் இது குறித்து கூறியதாவது:-  

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து, அதன் விலையும் கணிசமான அளவில் உயர்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நம் வீட்டில் பயன்படுத்தும் எல்.பி.ஜி. எரிவாயு தீரப்போகும் தருவாயில் புக் செய்தால் 40 நாட்களுக்கு பிறகே மீண்டும் புதிய எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது. இந்த தட்டுப்பாட்டை தீர்க்க யோசித்த போது, வேளாண்மை பல்கலைக்கழகம் பயோ-கேஸ் தயாரிக்க எனக்கு சில வழிமுறைகளை கற்றுகொடுத்தது. இதுகுறித்து, பலரிடம் ஆலோசனை கேட்டு தெரிந்து கொண்டேன். பிறகு, கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அதற்கான உபகரணங்களை வாங்கி வந்தேன்.  நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்திவிட்டு எச்சமாக எண்ணி தூக்கி எறியும் சாதம் வடித்த கஞ்சி, காய்கறிகள், பழங்களின் தோல், மற்றும் மாட்டு சாணத்தை ஒரு பெரிய தொட்டியில் போட்டு மூடி வைத்தேன். அவை மக்கும்போது பாக்டீரியாக்களால் உண்ணப்பட்டு நமக்கு மீத்தேன் எரிவாயு கிடைக்கிறது. 



வெற்றி 

எனது இந்த முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு முதல் இன்றுவரை எங்கள் வீட்டிற்கு பயோ-கேஸை பயன்படுத்தி வருகின்றேன்.  இதையறிந்த கல்லூரி மாணவர்கள் பலர் என்னிடம் வந்து இதை கற்றுச்சென்றனர். பல கல்லூரிகளில் பையோ-கேஸ் குறித்து வகுப்பு எடுத்து வருகிறேன். ஒவ்வொரு தேவைக்கும் அரசை எதிர்பார்த்து இருப்பதைவிட நமக்கு தேவையான மற்றும் நம்மால் உருவாக்க முடிந்தவற்றை நாமே தயாரித்து பயன்படுத்துவதன் மூலம், ஏழை மக்களுக்கு அரசின் சலுகைகள் எளிதில் சென்றடையும், அதோடு பொருட்களுக்கான தட்டுப்பாடும் குறையும். தொடர்ந்து இந்த ஆராய்சிகளை செய்துவருகிறேன். பொருளாதார ரீதியான பிரச்சனைகளால் பல ஆராய்ச்சிகள் தடைபட்டு நிற்கிறது. இதுவரை 40 க்கும் மேற்பட்டோர் அவர்கள் வீட்டில் பயோ-கேஸை அமைப்பதற்கு உதவி செய்துள்ளேன். இதை ஒரு சமூக கடமையாக கருதி தொடர்ந்து இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறேன். என்னைப்போன்று  வேறு யாரேனும் தங்கள் வீடுகளில் பயோ-கேஸை பயன்படுத்த விரும்பினாலோ அல்லது இதுகுறித்து ஆலோசனையை பெறவோ என்னை  - 9942455151 இந்த கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



ஆற்றலுக்கு அழிவில்லை 

நீருக்கும், மின்சாரத்திற்கும் அண்டை மாநிலத்தரோடு மல்லுக்கட்டும் இந்த நேரத்தில், மானிய விலை சிலிண்டருக்காகவும் சண்டையிடும் காலம் வெகு தூரம் இல்லை. அடுத்த தலைமுறையினருக்கு இதுபோன்ற கண்டுபிடிப்புகளே நெடுநாள் பயனை தரும்.  நமது அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் போதும், அதில் சிறிது பொதுநலன் இருக்கும் போதும், அந்த அறிவு கொண்டாடப்படுகிறது என்பதற்கு ஸ்ரீதரனே உதாரணம். ஸ்ரீதரன் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  மீது அரசு தனி கவனம் செலுத்தி, அவர்கள் முயற்சிகளை ஊக்குவித்தால் தமிழகத்தில் எல்.பி.ஜி. பயன்பாடு குறையும். மேலும், ஆற்றலுக்கு அழிவில்லை என்ற கோட்பாடு அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து கழிவுகளும், குப்பைகளும் பயோ-கேஸாக மாறி பயன்பாட்டிற்கு வருவது உறுதி.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...