சொத்து வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்புகளை துண்டித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் 3 மண்டலங்களில் உள்ள வரிதாரர்கள் சொத்து வரி செலுத்தாததால் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 57-ல் மசக்காளிபாளையம், ஜி.வி.ரெசிடென்ஸியில் வசிக்கும் வரிதாரர்கள் சுபாஷ் சந்திர திவாரி மற்றும் திருவா சந்திர திவாரி ஆகியோர் சொத்து வரி ரூ.11 ஆயிரத்து 922 ரூபாய் மற்றும் 4 ஆயிரத்து 664 ரூபாய் செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

இதேப்போல், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 97-ல் குறிச்சி, அன்னை இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் சுமிதா என்பவர் சொத்து வரி ரூ.16 ஆயிரத்து 108 மற்றும் ரூ.19 ஆயிரத்து 308 செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 44-ல் சபரி கார்டன் பகுதியில் வசிக்கும் வி.சீதாலட்சமி என்பவர் சொத்து வரி ரூ.6 ஆயிரத்து 696 மற்றும் வார்டு 39-ல் ஆவாரம்பாளையம் பகுதியில் வசிக்கும் சாந்தா என்பவர் சொத்து வரி ரூ.76 ஆயிரத்து 360 செலுத்தாததால்  2 குடிநீர் இணைப்புகள் என ஆகமொத்தம் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...