வால்பாறை வனத்தில் காட்டெருமை விரட்டியதால் வனக்காப்பாளர் உயிரிழந்தார்


வால்பாறை வனச்சரகம் அக்காமலை புல்லுமேடு பகுதியில் செவ்வாயன்று காட்டெருமை விரட்டியதால் நெஞ்சுவலி ஏற்பட்ட வனக்காப்பாளர் சங்கிலிப்பாண்டி என்ற கணபதி (57) உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வால்பாறை வனக்காப்பாளர் திருமலைசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் கூறியுள்ளதாவது :- 

அக்காமலை பகுதியில் எனது தலைமையில் தர்மராஜ், சங்கிலிப்பாண்டி ஆகியோர் கோனலாறு வேட்டைத் தடுப்பு முகாமிற்கு நேற்று காலை சென்றோம் . ரோந்து பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக காட்டெருமை விரட்டியது. இதில் மூன்று பேரும் சிதறி ஓடினோம். 

பிறகு சங்கிலிபாண்டியை காணவில்லை. அவரை தேடி மீட்டபோது நெஞ்சு வலிப்பதாக கூறினார். நாங்கள் அவரை உடனே வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தோம். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்'' என கூறியுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து வால்பாறையில் உள்ள மானாம்பள்ளி வனச்சரக அலுவலகத்தில் குவிந்த வேட்டை தடுப்பு காவலர்கள் பணியின் போது உயிரிழந்த வேட்டை தடுப்பு காவலருக்கு ரூ.5 லட்சம் வழங்க வலியுறுத்தி வால்பாறை வனச்சரகர் சக்திவேலை நேற்று முற்றுகையிட்டனர். இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

ஆனால், வனக்காவலர்கள் வனச்சரகர் மற்றும் வனவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு, இறந்தவருக்கு வனத்துறை இழப்பீடு வழங்கினால் மட்டுமே நாங்கள் உடலை எடுத்துச் செல்வோம் என வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டனர். 

இதைத்தொடர்ந்து புதனன்று (இன்று) வால்பாறை, மாணாம்பள்ளி, டாப்சிலிப் சரகத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுப்பதாக ஒப்புக்கொண்டு முதல் தவணையாக ரூ.25 ஆயிரம் கொடுத்தனர். அதன் பிறகு உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின் சங்கிலிபாண்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...