500 ரூபா நோட்டு சவ ஊர்வலம் மார்க்சிஸ்ட் கட்சி நூதன போராட்டம்


செல்லாது என அறிவித்து நாட்டு மக்களை தெருவில் நிறுத்திய 500 ரூபாய் நோட்டுக்கு மாலை அணிவித்து சவ ஊர்வலமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் எடுத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.



நாட்டு மக்களின் 80 சதவீத புழக்கத்தில் உள்ள ரூ 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அவகாசம் தராமல் ஒரே இரவில்   பிரதமர் மோடி தடாலடியாக அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என மக்களின் எதிர்ப்பை சரிகட்ட சமாளித்தார். ஆனால்  இரண்டு வார காலம் கடந்த பின்னும் சரியாகவில்லை என்பது மட்டுமல்லாமல் மேலும், மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களின் போராட்டம் வெடித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெரியநாயக்கன்பாளைய ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம் பட்டி பிரிவில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 



முன்னதாக செல்லாது என அறிவித்த ரூ 500 பழைய நோட்டுக்கு சவ மாலை அணிவித்து நூதன போராட்டத்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் தொப்பம்பட்டி பிரிவில் உள்ள ஆந்திர வங்கியின் முன்பு  மோடி அரசின்  துக்ளக் தர்பார்  நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

இந்த போராட்டத்திற்கு சண்முக கனி தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரிய நாயக்கன்பாளைய ஒன்றிய செயலாளர் என்.பாலமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்ணன், தேவராஜ், கோகுலகிருஷ்ணன், பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

மார்க்சிஸ்ட் கட்சியின் நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...