கேழ்வரகின் விலை விவசாயிகளை மகிழ்விக்கும் என வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

கேழ்வரகு சிறுதானிய பயிர்களில் மிக முக்கியமான உணவுப் பொருளாகவும், மிகுந்த ஊட்டச்சத்து வாய்ந்ததாகவும், சேமித்து வைக்க ஏதுவானதாகவும் உள்ளது. இந்திய தேசிய வேளாண்மை அமைச்சகத்தின் நான்காம் முன் மதிப்பீட்டின் படி, 2015- 16 ஆம் ஆண்டில் கேழ்வரகு 1.20 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 1.79 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கேழ்வரகு உற்பத்தியில் கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர பிரதேசம், உத்திரகாண்ட், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் இமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகள் பெரும் பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் இயக்குனரகம் மதிப்பீட்டின்படி 2014- 15 ஆம் ஆண்டு கேழ்வரகு 0.11 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 0.25 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து மாநிலத்தின் மொத்த கேழ்வரகு உற்பத்தியில் 87 சதவிகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

டிசம்பர் மாத இறுதியில் கேழ்வரகின் சந்தை வரத்து ஆரம்பமாகிறது. இதனை தொடர்ந்து, வருடம் முழுவதும் சேமித்து வைத்து பயன்படுத்தப்படுகிறது. சாதகமற்ற பருவ மழையின் காரணமாக கேழ்வரகின் உற்பத்தி தமிழகத்தில் குறைந்துள்ளது. எனவே, கேழ்வரகிற்கு தேவை அதிகமாக இருப்பதால் வரும் மாதங்களில் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 10 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய கேழ்வரகு விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்பு திட்டம், ஆய்வு செய்து சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான கேழ்வரகின் பண்ணை விலையானது கிலோவிற்கு ரூ.20 முதல் 22 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் படி விதைப்பு முடிவுகளை எடுத்தால் அதிக பயன்பெறலாம்.

இதுகுறித்தான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641 003 என்ற முகரிக்கோ, அல்லது, 0422- 2431405 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...