வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வல்லுநர்கள் குழு உலக நாடுகளில் உள்ள சட்டங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு சட்ட முன்வடிவை அரசு பரிந்துரை செய்து இந்திய அரசியலமைப்பு சபையால் அந்த முன்வடிவு அங்கீகரிக்கப்பட்ட நாள் நவம்பர் 26-ஆம் தேதி ஆகும்.



அந்நாளை சட்ட நாளாக கொண்டாடப்படும் வகையில் இன்று வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி ஆறுமுகம் தலைமை வகித்தார். வால்பாறை வழக்கறிஞர் சங்க செயலாளர் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல், மாணாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர், நகராட்சி பொறியளர் ராஜகோபால், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம், வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆனந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.



இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் பால்பாண்டி, சுமதி, வினோத்குமார், அன்பு நாகராஜன் உள்ளிட்ட பல நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் நீதிபதி ஆறுமுகம் பேசுகையில், பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு இலவசமாக நீதிமன்றத்தை நாடி சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து பேசினார்.

இதனைத்தொடர்ந்து, முகாமில் பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...