கோவை அரசு பொது மருத்துவமனையில் இருதய மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விரைவில் துவங்கப்படும்

கோவை அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் சிறுநீரக பிரிவு, இருதய சிகிச்சை பிரிவில் கூடியவிரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை முறை துவங்கப்படும் என அம்மருத்துவமனையின் டீன் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:-

கோவை அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை துவங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த விண்ணப்பம் சென்னை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது ஆய்வில் உள்ளது. அங்கிருந்து அனுமதி வந்தவுடன் மேற்குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகள் துவங்கப்பட்டு விடும். டிசம்பர் மாதம் இறுதிக்குள் அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. 

தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று, இருதய சிகிச்சைகளுக்கு குறைந்தது சுமார் 3.5 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக துவங்கப்படும் இந்த சிகிச்சை மூலம் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து ஏழை, எழிய மக்கள் மிகுந்த பயனடைவர். 

சிகிச்சைக்கான பயனாளர்கள் குறித்தும் பெயர் தேர்வு செய்யப்பட்டு தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு முடிந்து சென்னையில் இருந்து நிதி வந்தவுடன் அறுவை சிகிச்சை துவங்கப்படும்'' என கோவை அரசு பொது மருத்துவமனை டீன் எட்வின் ஜோ தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...