கோவை மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கு

கோவை: அரசுக் கலைக்கல்லூரியில்  கோவை மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கு இரண்டு நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது. கருத்தரங்கு நிகழ்ச்சியை கோவை வருவாய் கோட்டாசியர் அலுவலர் மதுராந்தகி துவங்கி வைத்தார். தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அன்புச்செழியன் வரவேற்புரை  வழங்கினார். 
 


இந்நிகழ்ச்சி, அரசு அலுவலர்கள் எல்லா நடைமுறைகளிலும் தமிழ்மொழியை  கடைபிடிக்கும் வகையில் சட்டம் மற்றும் அதன் அடிபடையில் இந்த ஆலோசனை கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலர்களுக்கு இந்த தமிழ்மொழிப் பயிலரங்கு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 



மேலும், இன்று நடைபெறும் பயிலரங்கில் அரசு அலுவலர்களுக்கான அரசு ஆணைகள், அலுவலக குறிப்புகள், ஆட்சி மொழி சட்டம் வரலாறு, வரைவுகள் மற்றும்  செய்முறை ஆணைகள் தயாரித்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் இப்பயிலரங்கு நடைபெறுகிறது. இரண்டாம் நாளன்று நிறைவு விழா நடைபெறும். இவ் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளவுள்ளார். 
 
இந்நிகழ்ச்சியில், அகரமுதலித் திட்ட இயக்குநர் (பொ) மற்றும் சேலம் மண்டலத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் செழியன், திருச்சிராப்பள்ளி தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் துரை.தம்புசாமி, தூத்துக்குடி தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் சிவசாமி மற்றும் 200க்கும் மேற்பட்ட கோவை மண்டல பல துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...