கோவையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலத்தில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (03.12.2016) கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



அமைச்சர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டுமென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டங்கள் இல்லை. பொது மக்களின் குறைகளை உடனடியாக தீர்வு காணும் விதமாக தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க இன்று (03.12.2016) கோவை மாநகராட்சியில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் மழை குறைவாக உள்ளதால், பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீரை பொது மக்களுக்கு சீரான முறையில் விநியோகிக்க வேண்டும். குறிப்பாக மழைகாலம் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு, போர்க்கால அடிப்படையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். கோவை மாநகராட்சியில் குடிநீர் குழாய்கள், தெரு விளக்குகள், சாலை பழுதுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இவ்வாறு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களின் தெரிவிக்கையில் “மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தலைமையில் ஐந்து மண்டலங்களிலுள்ள உதவி ஆணையாளர்களின் மேற்பார்வையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் செயல்படும். இந்த வாகனமானது ஐந்து மண்டலங்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை, அதாவது  திங்கட்கிழமை அன்று மத்திய மண்டலத்திற்கும், செவ்வாய் கிழமை அன்று கிழக்கு மண்டலத்திற்கும், புதன் கிழமை அன்று மேற்கு மண்டலத்திற்கும், வியாழக்கிழமை அன்று தெற்கு மண்டலத்திற்கும், வெள்ளிக் கிழமை அன்று வடக்கு மண்டலத்திற்கும் நாள்தோறும் அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, மாலை 4.00 மணியளவில் அந்தந்த மண்டல அலுவலகத்திற்கு வந்து சேரும். மேற்கண்ட ஐந்து மண்டலங்களின் அலுவலகத்திற்கு தினமும் மாலை 4.30 மணியளவில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் நேரடியாகச் சென்று பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கீழ்குறிப்பிட்ட நேரங்களில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களிடமும் பொது மக்கள் தங்கள் மனுக்களை நேரடியாகவும் வழங்கலாம்.



நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் செல்லும் இடங்களின் விவரம்
திங்கட்கிழமை 
மத்திய மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
மாநகராட்சி பிரதான அலுவலகம் மாலை 4.30 மணி

செவ்வாய்க்கிழமை 
கிழக்கு மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
கிழக்கு மண்டல அலுவலகம் மாலை 4.30 மணி

புதன் கிழமை
மேற்கு மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
மேற்கு மணடல அலுவலகம் மாலை 4.30 மணி

வியாழக்கிழமை 
தெற்கு மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
தெற்கு மண்டல அலுவலகம் மாலை 4.30 மணி

வெள்ளிக்கிழமை 
வடக்கு மணடலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
வடக்கு மண்டல அலுவலகம் மாலை 4.30 மணி

இந்த வாகனமானது ஐந்து மண்டலங்களிலும் தினமும் ஒவ்வொரு வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ந்து செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.நாகராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்.கே.அர்ஜுனன், வி.சி.ஆறுக்குட்டி, அ.சண்முகம், துணை ஆணையாளர் காந்திமதி அவர்கள், அனைத்து உதவி ஆணையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...