முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த பதிவுகளைக்காட்டி சமூக வலைத்தளங்களில் முட்டிக்கொள்ளும் இளைஞர்கள்


தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஜெயலலிதா-வின் உடல்நிலை குறித்து பலர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் பலர், முதல் அமைச்சர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் பதிவு செய்துள்ளனர். முகநூலில் பேசப்பட்ட தலைப்புகளில் (டிரெண்டிங்) ஜெயலலிதாவின் பெயர் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் சிலர், முதல் அமைச்சர் உடல் நிலை குறித்த அவதூறான தகவல்களை  பதிவேற்றி வருகின்றனர். இந்த பதிவுகளை பார்க்கும் ஜெயலலிதா நலம் விரும்பிகள் கொதிப்படைந்து பதிவிட்ட  அந்த நபரை திட்ட, பதிலுக்கு எதிர்தரப்பில் இருந்தும் தாறுமாறான வார்த்தைகள் வெடிக்க இரு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் சண்டையிட்டு கொள்கின்றனர்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் குறித்து அவதூறு பரப்புவோர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...