சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கண்காட்சி துவக்கம்

சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகம் சார்பில் எம்.எஸ்.எம்.இ எக்ஸ்போ 2016 என்னும்  கண்காட்சி கோவை மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் கோவை பிரிவு மற்றும் சிட்கோ தொழிற் பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் ஆகியவை இணைந்து டிசம்பர் 14 முதல் 16ம் தேதி வரை மூன்றுநாட்கள் கண்காட்சியினையும், வெண்டார் ஊக்குவிப்பு நிகழ்ச்சியினையும் நடத்தவுள்ளன.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பத்மாவதியம்மாள் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு தென்னைநார் கழக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதில், தொழில்முனைவோர் மத்தியில் மத்திய அரசின் கொள்முதல் கொள்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் தங்களது அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள தொழில்முனைவோர்களுடனான கருத்துக்களை பகிந்துகொள்ள வாய்ப்பாக இது அமையும்.

மொத்தம் 90 அரங்குகளாக அமைக்கப்படவுள்ள இக்கண்காட்சியில் மத்திய அரசின் ரயில்வேத் துறை, ராணுவத்துறை, மத்திய பொதுத்துறை நிறுவனங்களான பெல், பிஇஎம்எல், என்எல்சி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் இதில் பயனடையவுள்ளன.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...