மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் மீட்கப்பட்ட 26 வது மரம் "அரசமரம்"


கோவை - பொள்ளாச்சி சாலையை விரிவுபடுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கு சாலை ஓரங்களில் உள்ள மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ஓசை, சிறுதுளி, குறிச்சிக்குளம்  பாதுகாப்பு இயக்கம், பசுமை தேசம், ராக் அமைப்பு ஆகிய தன்னார்வ அமைப்புகள் இனைந்து மரங்களுக்கு மறுவாழ்வுப் பணியை மேற்கொண்டனர்.  இதன்மூலம் சாலை ஓரங்களில் உள்ள 25திற்கும் மேற்பட்ட மரங்களை மாற்று இடத்தில் நடப்பட்டுள்ளது. 



இந்நிலையில், பொள்ளாச்சி சாலையில் வெட்டப்படவிருந்த மரத்திற்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 26வது மரமாக அரசமரத்திற்கு மறுநடவு செய்யும் பணிகள் நேற்று காலை 8 மணி அளவில் துவங்கி, மாலை 5 மணிக்கு அரசமரம் மறுநடவு செய்யும் பணி நிறைபெற்றது. ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் வேருடன் அகற்றப்பட்ட இந்த மரத்தை வாகனத்தில் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு செல்லப்பட்டு செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஃபைர்பேர்டு இன்ஸ்டிடியூடில் நடப்பட்டது. 



மரம் மீட்கப்படும் இடம் :-குறிச்சிக்குளம் அருகில் பொள்ளாச்சி சாலை.

மீட்கப்படும் மரம் :- அரசமரம்.

மரத்தின் வயது:- 45 வருடங்கள்.

மரத்தை மறுநடவு செய்யப்படும் இடம்:- ஃபைர்பேர்டு இன்ஸ்டிடியூட் செட்டிபாளையம்.



Newsletter

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...

Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam

The Coimbatore Corporation has cleared accumulated garbage from a municipal site in Senguttai, Masakkalipalayam, and pla...

SUV Plunges into Pond Near Karumathampatti; Two Killed

Two persons from Tiruppur district died after the Bolero vehicle they were travelling in lost control and overturned int...

கோவை ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோவையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட...