மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவையில் திருநங்கைகள் மெளன அஞ்சலி ஊர்வலம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருக்காக கண்ணீர் அஞ்சலி, மெளன அஞ்சலி ஊர்வலம், மொட்டை அடித்தல் உள்ளிட்டவைகள் அதிமுக கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் செலுத்தி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் திருநங்கைகள் சார்பாக ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட அவர்கள் கவுண்டம்பாளையத்திலிருந்து டி.வி.எஸ் நகர் வரை மெளன ஊர்வலமாக சென்றனர். 



இதுகுறித்து கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க செயலாளர் பூங்குழலி கூறும்போது, கோவை மாவட்டத்தில் 480-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பசுமை வீடுகள், ஆதார் கார்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும், ரேசன் கார்டுகள் குடும்பங்களுக்கு தான் வழங்கப்படும். நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இல்லை. ஆனால், ஜெயலலிதா ரேசன் கார்டுகள் 1 வாரத்தில் எங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். 



எங்களுக்கு வேலைகளும் தற்போது கிடைக்கிறது. எங்களாலும் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியும் என்பது ஜெயலலிதாவின் ஆட்சியில்  தான். அவர்கள் இறந்த செய்தியை கேட்டு எங்களால் 2 நாட்களாக தூங்க முடியவில்லை, உணவு உண்ணவில்லை , இனிமேல் இவரை போல தலைவர் வருவாரா என்பது சந்தேகமே என்று கூறினார்.

Newsletter

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...

Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam

The Coimbatore Corporation has cleared accumulated garbage from a municipal site in Senguttai, Masakkalipalayam, and pla...

SUV Plunges into Pond Near Karumathampatti; Two Killed

Two persons from Tiruppur district died after the Bolero vehicle they were travelling in lost control and overturned int...

கோவை ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோவையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட...

Road Accidents in Coimbatore: Elderly Man Killed; Four Seriously Injured

Four separate road accidents reported in Thudiyalur, Kavanuai, Vadavalli and Ramanathapuram areas of Coimbatore have lef...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...