லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலி


கோவை எல்&டி புறவழிச்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியானார்கள். ஒரு பெண் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை வெள்ளலூர்  பகுதியைச் சேர்ந்தவர் மதபோதகர் ஜீவா. இவரது மனைவி ஜெபா, ஒன்றரை வயது குழந்தை ஜெரோமியா ஆகியோருடன் இன்று பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற ஜீவா, மத பிரச்சாரங்களை முடித்துவிட்டு கோவை வெள்ளலூர் திரும்பினார். 

அப்போது சித்ரா என்ற உறவுக்கார பெண்ணையும் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கோவை திரும்பினார். கோவை எல்&டி புறவழிச்சாலை அருகே கஞ்சிகோணாம்பாளையம் என்ற பகுதி வழியாக வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது இவர்களது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஒன்றரை வயது குழந்தை ஜெரோமியா உள்ளிட்ட மூவரும் பலியானார்கள். சித்ரா என்ற பெண் மட்டும் பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து போத்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...