நாடு முழுவதும் தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவு


நாடு முழுவதும் தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

நெடுஞ்சாலை ஓரங்களில் செயல்படும் மதுக்கடைகளால் சாலை விபத்துகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. இதனால் நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என மூத்த வழக்கறிஞர் கே.பாலு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. 

இவ்வழக்கிற்கான தீர்ப்பை இன்று வழங்கிய உச்சநீதிமன்றம், மாநில மற்றும் தேசிய நெஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், தற்போதைய மதுக்கடைகளை 2017-ம் ஆண்டு ஏப்ரல் வரை நடத்தலாம் என்றும் அதன் பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...