பொதுமக்களை தற்கொலைக்கு தூண்டும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பு மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் சி பி ஐ எம் மனு


பொதுமக்களை தற்கொலைக்கு தூண்டும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பின் மீது நடவடிக்கை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு சார்பில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து, அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத் தேவைக்காக மைக்ரோ பைனான்ஸ் அமைப்புகள் மூலம் மாதாந்திர தவணைக் கடன் பெற்றுள்ளனர்.

குறைந்தபட்சம் 9 பேரிலிருந்து 45 பேர் வரை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு தனிநபர் ஜாமீன் பெற்று 24 தவணையில் கடன் வாங்கியுள்ளனர். இதில் கடந்த நவம்பர் மாதம் வரை முறையாக தவணைத் தொகை செலுத்திவந்த நிலையில் மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டு தடையால் சிறுசிறு வியாபாரம் மூலம் வருமானம் ஈட்டிவந்த சாமான்ய மக்களின் வருமானம் முடங்கிபோயுள்ளது.

இந்நிலையில், மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெறப்பட்ட மாதாந்திர தவணைத் தொகையை செலுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொள்ளாத மைக்ரோ பைனான்ஸ் பொறுப்பாளர்கள் பெண்களை மிகக் கேவலமாக திட்டி அவமானப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக "பெண்கள் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் பெயரில் காப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்களிலிருந்து பணம் திரும்ப கிடைத்துவிடும். எனவே, தற்கொலை செய்து கொள்ளுங்கள்" என மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...