கதவடைப்பு செய்யப்பட்ட நிறுவனத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவை சூலூரில் உள்ள தனியார் (டி.டி.எல்) வைரம் பட்டை தீட்டும் நிறுவனம் கதவடைப்பு செய்ததை கண்டித்தும், நிறுவனத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் கோவை தொழிலாளர் துறை அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் டி.டி.எல் என்ற தனியார் வைரம் பட்டை தீட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் வைரம் பட்டை தீட்டும் மையங்கள் நரசிம்மநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சூலூரில் செயல்பட்டு வரும் மையத்தை கதவடைப்பு செய்த நிர்வாகம், அதில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றியுள்ளனர். முன்னறிவிப்பின்றி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சூலூரில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிக்கு செல்ல 40 கிலோ மீட்டர் தூரம் என்பதால் அனைத்து பெண் தொழிலாளர்களும் அங்கு வேலைக்கு சென்று வர முடியாது எனவும், எனவே சூலூரில் உள்ள நிறுவனம் தொடந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் ஆய்வாளர் லட்சுமிநாராயணன் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி 200-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தொழிலாளர் துறை அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தொழிலாளர் ஆய்வாளர் லட்சுமி நாராயணன் அறை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் காரணமாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருவதைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஏராளமான பெண் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களுடனும், அவர்களுடன் வந்த சிஐடியு தொழிற்சங்கத்தினருடனும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...