டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்த சரவணனின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் - பெற்றோர்கள் கோரிக்கை


கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சரவணனின் பெற்றோர் அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 



திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மருத்துவ மேல்படிப்பிற்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார், அங்கு கடந்த ஜூலை 10 ஆம் தேதி சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு சென்ற அவரது பெற்றோர்கள் சரவணன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். இந்நிலையில் சரவணன் பிரேத பரிசோதனையின் முடிவில் திட்டமிட்டு சரவணனுக்கு கையில் விஷ ஊசி செலுத்தப்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர். 

சரவணன் மரணம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரவணன் உயிரிழப்பிற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். சரவணன் கொலையில் டெல்லி காவல்துறையினருக்கு சம்மந்தம் உள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் விரைவில் புதிய தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து அவரிடம் தங்களது கோரிக்கைகளை வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...