வீட்டிற்குள் கார் நுழைந்து 5 பேர் காயம்- காரை ஓட்டியவர் தலைமறைவு

கோவை வடவள்ளியில் இருந்து வேடப்பட்டி செல்லும் வழியில் உள்ள அஜ்ஜனூரில் சாலையின் இருபுறங்களிலும் வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் வடவள்ளியில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று அஜ்ஜனூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த காளிமுத்து என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவரை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்தது.



இந்த விபத்தில் அங்கிருந்த காளிமுத்துவின் தாய் லட்சுமி (60), மருமகள் சரஸ்வதி (35), பேத்திகள் சங்கீதா (12), உதயசங்கரி (9) மற்றும் ரங்கநாதன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, காரை ஓட்டிவந்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி காவல் ஆய்வாளர்  à®šà®¿à®¤à¯à®°à®¾ மற்றும் காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய காரை பரிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, மேற்கொண்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தது சுண்டபாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...