ஓசை தன்னார்வலர் அமைப்பின் சார்பில் இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு மரங்கள்


மதுக்கரை அருகே உள்ள மைல்கல் பகுதியில் அரசு பொது இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த இரண்டு பெரிய புங்கமரங்களை அகற்றுவது குறித்து ஓசை அமைப்பின் சையது-விற்கு மாநகராட்சி அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஓசை மற்றும் பசுமை தேசம் தன்னார்வலர் அமைப்பின் சையது மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் அந்த மரங்களை வேருடன் அகற்றி கோவைபுதூரில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடவு செய்தனர்.



இதுகுறித்து ஓசை சையது நமது நிருபரிடம் கூறியதாவது:-

மாநகராட்சி பொது இடத்தில் இருந்த மரத்தினை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்ய மாநகராட்சி தன்னார்வ அமைப்பினரை தொடர்பு கொண்டிருப்பது இதுவே முதன் முறை. சமீபத்தில் பொள்ளாச்சி சாலை விரிவாக்கப்பணிக்காக அகற்றப்பட்ட மரங்கள் பல்வேறு இடங்களில் நடப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலர்களை ஊக்குவித்துள்ளது" என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...