மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் நபர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அடையாள அட்டைகளை வழங்கினார்


கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் அடையாள அட்டைகளை வழங்கினார்.

 

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பேசுகையில்; “கோயம்புத்தூர் வெள்ளளுர் குப்பை கிடங்கில் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றார்கள். மேலும் மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் செல்லும்  குப்பைகளை சேகரிக்கும் நபர்கள், குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டும் வருகின்றார்கள், அவர்களின் பாதுகாப்பு கருதியும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முதற்கட்டமாக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் நபர்களை கணக்கெடுப்பு நடத்தி ஒருங்கிணைத்து 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

 

மேலும் கோயம்புத்தூர் திடக்கழிவு மேலாண்மையின் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் 100 வார்டுகளுக்கும் செல்லும்  குப்பைகளை சேகரிக்கும் நபர்கள், உயர்ந்த மதிப்பான குப்பை பொருட்களை மட்டும் எடுத்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய வருமானத்தை உயர்த்தும் வகையில் குறைந்த மதிப்புள்ள குப்பை பொருட்களையும் சேகரித்து மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையிடம் வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

 

மேலும் அடுத்த கட்டமாக குப்பைகளை சேகரிக்கும் நபர்கள் அனைவருக்கும் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு பயிற்சியும், மருத்துவ சிகிச்சை முகாமும் நடைபெற உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...