கோவை மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ.87 கோடியில் கௌசிகா நதி புனரமைப்பு திட்டம்


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வேளாண் பொறியியல் துறை மூலம் கௌசிகா நதி புனரமைப்பு திட்டம் குறித்த கையேடு வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சி தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் கையேட்டினை வெளியிட்டார்.



பின்னர் அவர் பேசுகையில்;

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நீர் ஆதாரமாக மொத்தம் நான்கு நதிகள் உள்ளன. அவை பவானி ஆறு, நொய்யல் ஆறு, அமாராவதி ஆறு, மற்றும் கௌசிகா நதி ஆகிய நதிகள் உள்ளன. இதில் கௌசிகா நதி மட்டும் கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மேற்கு புறமாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் “குருடி” மலையில் உற்பத்தியாகி 39 கி.மீ கோவை மாவட்டத்திலும், 10.8 கி.மீ திருப்பூர் மாவட்டத்திலும் ஆக மொத்தம் 49.8 கி.மீ பயணித்து திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டிபாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது.

இந்நதியின் நீர்பிடிப்புப்பகுதி இரண்டு மாவட்டங்களில் 4 வட்டங்கள், 5 வட்டாரங்களில் 7 பேரூராட்சிகளில் உள்ளடங்கிய 45 வருவாய் கிராமங்களில் பரவிக்கிடக்கிறது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் மலை சார்ந்த பகுதிகளில் மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாலும் பிற பகுதிகளில் நகரமயமான காரணத்தினாலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் வறண்டு கிடக்கிறது. இதனால் ஆற்றின் அருகாமையிலுள்ள ஊராட்சிகளின் கழிவுகள் மற்றும் குப்பைகள் சேகரிக்கும் இடமாக இந்த ஆறு மாறிவருகிறது. மேலும் சில இடங்களில் கரையின் இருபுறங்களும் ஆக்கிரமிப்புகளும் காணப்படுகிறது. ஆற்றின் இரு புறங்களிலும் வெகுவாக நடைபெற்று வந்த விவசாயம் தற்சமயம் நீர் ஆதாரம் இல்லாததால் மிகவும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் சிரமத்திற்க்கு உள்ளாகியுள்ளனர்.

தற்சமயம் உலகம் வெப்பமயமாதல் காரணத்தால் மழை காலங்களில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கும் அதே சமயம் கோடைக்காலங்களில அதிகப்படியான வறட்சியும் அனுபவத்தில் உள்ளது. இந்த கௌசிகா நதி பகுதிகளில் சராசரி மழை அளவு 565 மி.மீ. மழை அதிகமாக பெய்தால் இதனை சரிவர சேமிப்பு மற்றும் மேலாண்மை செய்தால் இப்பகுதியில் விவசாய நிலங்களில் பாதிப்புகள் குறைக்க வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் கோவை மாவட்ட பொறியியல் துறை கௌசிகா நதி புனரமைப்பு திட்டம் ஒன்று ரூ.87.00 கோடிக்கு தயாரித்துள்ளது. இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் புனரமைப்பு பணியை நிறைவு செய்திட முடியும். இதற்காக திட்ட அறிக்கையினை நிதி ஒப்புதலுக்காக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதி ஒப்புதல் பெற்றவுடன் கீழக்கண்ட பணிகள் செயல்படுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதில் கம்பிவலை, தடுப்பணைகள், சிறிய நடுத்தர மற்றும் பெரிய தடுப்பணைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், செயற்கை நீர் செறிவூட்டும் அமைப்புகள், ஆற்றில் உள்ள புதர் மற்றும் குப்பைக்கூளங்களை அகற்றி ஆழப்படுத்தி இருபுறமும் கரைகளை செம்மைப்படுத்தி கரைகளில் மரம் நடுதல், நீர்வடிப்பகுதிகளில் ஏற்கனவே உள்ள தடுப்பணைகள் மற்றும் குட்டைகளை செம்மைப்படுத்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், நிலம் சமன்செய்தல், வரப்புகள் அமைத்தல் மற்றும் உழவுப்பணி மேற்கொள்ளுதல், நீர்பிடிப்புபகுதியில் ஆற்றிற்க்கு நீர்வழிப்பாதையினை சரிசெய்தல் மற்றும் மண் அரிப்பு தடுக்க வழிவகை செய்தல், அதிக உயரமுள்ள பகுதிகளில் ஆறு மற்றும் ஓடைகளின் கரைகளில் விவசாய நிலம் சரியாதவண்ணம் மண்தடுப்பு சுவர்கள் அமைத்தல், விவசாயிகளுக்கு சூரியஒளி மின்சக்தி மோட்டார் வழங்குதல், விவசாயிகளுக்கு காலத்தே பயிர் செய்யும் பொருட்டும், வேலையாட்களின் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டும், மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகள் மற்றும் ஆர்வலர்களுக்கு நதி நீர் மேலாண்மை தொடர்பாக பயிற்சிகள் மற்றும் பட்டறிவு பயணம் ஏற்பாடு செய்தல், ஊராட்சி கழிவுநீர் மேலாண்மை கட்டமைப்புகள் அமைத்தல் என மேற்கண்ட பணிகள் செயல்படுத்துவதால் இப்பகுதியில் பெய்கின்ற மழைநீரினை விரையமாகாமல் விவசாய நிலங்களிலேயே பரவி ஊடுருவ செய்ய இயலும். மேலும் நதியினை புனரமைத்து புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்துவதால் ஆற்று நீர் ஆங்காங்கே தேங்கி நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்படும். இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும். விவசாய கூலிகள் இடம் பெயர்தல் முற்றிலும் தடுக்கப்படும். மேலும் விவசாய பூமிகள் நகர்புறமாக மாறாமல் தடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழச்சியில், மாவட்டவருவாய் அலுவலர் கிருஸ்துராஜ், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சந்திரசேகரன், பொறியியல்த்துறை செயற்பொறியாளர் ஜுவானநந்தம், வேளாண்மைத்துறை துணைஇயக்குநர் மோகன்ராஜுசாமுவேல், மாவட்டமத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சக்திவேல், வருவாய் கோட்டாட்ச்சியர் மதுராந்தகி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...