வால்பாறையில் டாக்டர். அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் துவக்கவிழா


வால்பாறையில் டாக்டர். அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வரவேற்புறை ஆற்றினார். வால்பாறை வட்டாட்சியர் கோமதி தலைமை வகித்தார்.



தேயிலைத் தோட்ட நிறுவன ஆய்வாளர் ஜே.ஏ.முகமது யூசுப், வழக்கறிஞர் அசோகன், வால்பாறை நூலகம் வேலூச்சாமி, வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெபராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் தமிழ்மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். 

இதைத்தொடர்ந்து, அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநர் கணேஷ் சிறப்புறையாற்றுகையில், வால்பாறை மற்றும் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வால்பாறை பகுதியில் படித்த அனைத்து மாணவ மாணவிகளும் பயன்பெறும் விதமாக இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவங்கப்பட்டதாக தெரிவித்தார்.



வட்டாட்சியர் கோமதி பேசுகையில், வாரத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களில் நடக்கும் இந்த இலவச பயிற்சி மையத்தில் படித்து இப்பகுதியில் படித்த மாணவ மாணவிகள் அனைவரும் எஸ்டேட்டில் தங்களது பெற்றோர்களின் கஷ்ட நிலையினை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று வலியுறுதினார். 

இந்நிகழ்ச்சியில், ஏராளமான மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர் கணேஷ், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...