காவல்துறை மற்றும் கேம்சிஎச் மருத்துவமனை இணைந்து விபத்து இல்லாத புத்தாண்டு கொண்டாட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடு


புத்தாண்டு கொண்டாடும் தருணத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதை தடுப்பதற்கு கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, மாநகர காவல் துறையினருடன் இணைந்து கோவை மாநகரத்தின் முக்கிய சாலை ஓரங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு அத்துமீறல்கள் சாலையில் நடந்து வருவது தெரிந்ததே. டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு சாலைகளில் மது அருந்திவிட்டு ஆட்டம், பாட்டம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் சிலர் ஈடுபடுகின்றனர். மேலும் சிலர் மது அருந்திவிட்டு வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். இந்த விபத்தில் இவர்கள் மட்டுமில்லாமல் சில நேரங்களில் பொது மக்களும் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.

இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நூதன நடவடிக்கைகளை மாநகர காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். இம்முறையும் கோவை மாநகர காவல் துறை, கேஎம்சிஎச் மருத்துவமனையுடன் இணைந்து 22 கண்காணிப்பு மையங்கள் அமைக்க உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க இந்த கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மையங்களில் அவர்களுக்கு கஷ்தூர்பா காந்தி மதுபோதை மீட்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தன்னார்வ தொண்டர்கள் கவுன்சிலிங் அளித்து இரவு முழுவதும் கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.

இதுகுறித்து, கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், இந்த கண்காணிப்பு மையங்கள் மாநகரத்தின் முக்கியமான சாலைகளில் அமைக்கப்படும். மற்றும் முன்னெச்சரிக்கையாக முக்கிய இடத்தில ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும் என்றார். இதன் மூலம் விபத்து இல்லாத 2017 புத்தாண்டினை கொண்டாட முயற்சி செய்வோம் என்றும் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...