விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்- திட்டமிட்டு வெற்றிபெற்ற கோவை காவல் துறை


கடந்த 2015 மற்றும் 2016 புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்டது போன்ற உயிரிழப்பு மற்றும் சாலை விபத்துகள் 2017 புத்தாண்டு தினத்தன்று ஏற்படக் கூடாது என திட்டமிட்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையிலான காவல் துறையினர் கடந்த 15 நாட்களாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில், நட்சத்திர ஓட்டகள் மற்றும் டாக்ஸி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி கொண்டாட்டம் முடிந்து செல்பவர்கள் பத்திரமாக வீடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், விழிப்புணர்வு வாழ்த்து அட்டைகள், வாட்ஸ்அப் செய்திகள், வானோலி மூலம் விழிப்புணர்வு, உள்ளூர் கேபிள் சேனல்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



22 வாகன சோதனை மையங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனங்கள் ஓட்டிய 1000 பேர் காவல் துறையினரால் ஏற்படுத்தப்பட்ட ஷாமியானா பந்தலில் அமர வைக்கப்பட்டனர். இதன் மூலம் அவர்களது நடமாட்டம் கட்டுபடுத்தப்பட்டது.

12 மணிக்கு மேல் காவல்துறை சார்பாக கேக் வெட்டி கொடுக்கபட்டது. 22 வாகன பரிசோதனை மையங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை கே.எம்.சி.எச் மருத்துவமனை நிர்வாகம் செய்திருந்தனர். நா.மகாலிங்கம் மன நலம் ஆலோசனை மையம் மற்றும் யெங் இந்தியன் சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு தன்னார்வலர்களாகவும் பணியாற்றினர்.

கோவை டைடல் பார்க்கை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் சித்தார்த் காவல்துறையின் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டத்தால் ஈர்க்கப்பட்டு தன்னார்வலராக சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இதற்கான ஏற்பாடுகளை காவல் துணை ஆணைய‌ர் லட்சுமி (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல்துறை ஆணையர் 

சரவணன் (போக்குவரத்து) ஆகியோர் மேற்கொண்டனர். இவற்றின் மூலம் 2017 ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் உயிரிழப்பு மற்றும் விபத்துகளின்றி முடிந்தது

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...