ஈஷா யோகா மையத்திற்கு குடும்பத்துடன் வந்த ஹரியானா ஆளுநர்


ஹரியானா ஆளுநர் ஸ்ரீ கப்தன் சிங் சோலங்கி புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்தார்.



இதுகுறித்து, ஸ்ரீ கப்தன் சிங் சோலங்கி கூறுகையில், ஈஷா யோகா மையத்திற்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்வில் ஒரு புதிய பாதையை ஈஷா காட்டுகிறது. ஈஷாவிற்கு வந்தாலே ஒருவித ஆன்மீக  à®‰à®£à®°à¯à®µà¯ மனதில் நிலவுகிறது. ஆன்மீகத்திற்காக சத்குரு இங்கே ஒரு மிகச்சிறந்த ஆன்மீக வழித்தடத்தை உருவாக்கியுள்ளார்.



ஸ்ரீ சோலங்கி ஈஷாவில் அமைந்துள்ள 21 அடி சிவன் சிலையினை பார்வையிட்டார். தொடர்ந்து, தியானலிங்கம், லிங்கபைரவி உள்ளிட்ட இடங்களிலும் அவர் நேரம் செலவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...