ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆட்டோ மீட்டர் கட்டண பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாரதீய போக்குவரத்து ஆட்டோ, டெம்போ, மினிடோர் தொழிலாளர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆட்டோ மீட்டர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆட்டோ தொழிலாளர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொண்ட மீட்டர் கட்டணமான குறைந்தளவு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.30, அடுத்து வருகிற ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.15ம் அரசு வழங்கினால் அந்த கட்டணத்தை அமல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களும், தொழிற்சங்கங்களும் தயாராக உள்ளோம்.

இருப்பினும் ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சனையில் தமிழக அரசு பாராமுகமாகவே செயல்பட்டு வருகிறது.

இச்சூழ்நிலையில், ஆட்டோ தொழிலையும், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் வகையில் இந்த தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மீட்டர் கட்டணத்தை நீதிமன்றம் அறிவித்தபடி தொழிற்சங்கத்தை அழைத்து பேசி உடனே கட்டணத்தை முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும். தமிழக அரசு சென்னைக்கு அறிவித்தது போல் தமிழகம் முழுவதும் அனைத்து ஆட்டோக்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்திய மீட்டர் வழங்க வேண்டும்.

ஆட்டோ தொழில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தாலும், கோவை மாவட்டத்தில் அதிகமான ஆட்டோக்கள் இருப்பதாலும் ஆட்டோக்களுக்கு வழங்கும் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...