அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலகிய அ.தி.மு.க-வினர் கோவையில் ஜெ-தீபா பேரவை துவங்கினர்


அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் அக்கட்சியில் இருந்து விலகியவர்கள் ஜெ-தீபா பேரவை என்ற அமைப்பை துவங்கியுள்ளனர்.

தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அவரது தோழி சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதனிடையே சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்க வேண்டுமென, அக்கட்சி அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெ-தீபா பேரவை என்ற அமைப்பை துவக்கி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெ-தீபா பேரவை அமைப்பை துவக்கினர். சசிகலா தலைமையை ஏற்க பிடிக்காததால் அ.தி.மு.க வில் இருந்து விலகி இந்த அமைப்பை துவக்கி இருப்பதாகவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டுமெனவும் ஜெ-தீபா பேரவையினர் தெரிவித்தனர். 

அ.தி.மு.க வில் சசிகலா மற்றும் தீபா ஆதரவாளர்கள் இரு பிரிவினராக செயல்பட்டு வருவது, அக்கட்சி தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...