வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் கோவையில் மோசடி


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சச்சஸ் இன்டர்நேசனல் பிசினஸ் சொலியூசன் என்னும் நிறுவனம் இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி விட்டதாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர் லட்சுமியிடம் தேனியைச் சேர்ந்த ராஜா என்பவர் மனு அளித்துள்ளார். 

அம்மனுவில், கோவை மாவட்டம் சௌவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சச்சஸ் இன்டர்நேசனல் பிசினஸ் சொலியூசன் என்னும் நிறுவனத்தினர் ஸ்ரீகாந்த் மற்றும் சுரேஷ் ஆகியோர் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தேனி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறினர். 

இதற்காக 60 லட்சம் ரூபாய் வரை என்னைப் போன்று சுமார் 34-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இருந்து முன்தொகையாக பெற்று அதற்கு ரசீதும், சில ஆவனங்களையும் வழங்கினர். அவ்வாறு பணம் செலுத்தியவர்கள் மூன்று மாதத்தில் வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவர் என அறிவித்தனர்.

இவ்வாறு பணம் செலுத்தி பல மாதம் கடந்தும் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. அதுவிசயமாக விசாரிக்க வந்த போது மேற்குறிப்பிட்ட நிறுவனம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர்களது அலைபேசியும் துண்டித்து வைத்துள்ளனர். 

இதனால், எங்களுக்கு அந்நிறுவனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு எங்களது பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...