சம ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சியில் 2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இதில், நிரந்தர ஊழியர்களை விட கூடுதலாக தாங்கள் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு வழங்கும் ஊதியத்தை போல தங்களுக்கும் வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் என்ற விகிதத்தில் மாதம் 6000 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும்  à®šà¯†à®©à¯à®©à¯ˆ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய அதிக அளவில் ஒப்பந்த தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டதாகவும் குறைந்த கூலியில் வேலை செய்யும் பணியாளர்கள் கவுரவமாக  à®¨à®Ÿà®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®µà®¤à®¿à®²à¯à®²à¯ˆ என குற்றம் சாட்டினர். 

மேலும், தொழிலாளர் சட்டவிதி 25 (5)அ -வின் படி நிரந்தர பணியாளர் செய்யும் அதே வேலையை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை மாநில அரசும் மாநகராட்சி நிர்வாகமும் அமல்படுத்த மறுத்து வருகிறது.

தொழிலாளர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மாநகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆஜராகாமல் உள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்பிரச்சனையில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் மாநகர ஆணையர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...