தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மாநகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு


கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதியின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் ஐந்து மண்டலங்களிலுள்ள உதவி ஆணையர்களின் மேற்பார்வையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் ஐந்து மண்டலங்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை செல்கின்றது.

அதாவது, திங்கட்கிழமை மத்திய மண்டலத்திற்கும், செவ்வாய் கிழமை கிழக்கு மண்டலத்திற்கும், புதன் கிழமை மேற்கு மண்டலத்திற்கும், வியாழக்கிழமை தெற்கு மண்டலத்திற்கும், வெள்ளிக் கிழமை வடக்கு மண்டலத்திற்கும் என நாள்தோறும் அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெற்று வருகின்றது.

மேலும், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாகனமானது தொடர்ந்து ஐந்து மண்டலங்களிலும் சென்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுவரும். 

மேலும், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 2017 ஜனவரி மாதம் முதல் ஐந்து மண்டலங்களில் மாதத்தின் முதல் வாரம் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் பொதுமக்கள் மனுக்களை ஆணையரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து மத்திய மண்டல மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைத் தொட்டிகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.'' இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மத்திய மண்டல மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...