ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம், பாண்டிச்சேரியில் புல்லட்டில் வலம் வரும் இளம் பெண்


தமிழர்களின் அடையாள சின்னமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் புல்லட்டில் வலம் வருகிறார் இளம் பெண் மகேஸ்வரி.



பாண்டிச்சேரியை பூர்வீகமாகக் கொண்டவர் மகேஸ்வரி (28). கடந்த பத்து ஆண்டுகளாக புல்லட்டில் பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொண்டு சாதனைகளைப் புரிந்துவருகிறார். இவர் இதுவரை ஹெல்மெட் பிரச்சாரம், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகப் புல்லட்டை ஓட்டி சாதனை புரிந்துள்ளார். 

இந்நிலையில், தற்போது இவர் தமிழர்களின் அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்று கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்.



நேற்று பாண்டிச்சேரியில் புறப்பட்ட அவர் சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு வழியாக இன்று கோவையை வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தான் இதுவரை 1,000 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்துள்ளதாகவும், இனி கன்னியாகுமரி வரை சென்று மீண்டும் பாண்டிச்சேரி செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரை அவர் ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாகவும், சென்ற இடம் அனைத்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்த அவர், வேலூரில் கடந்த காலங்களில் 265 கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தற்போது மொத்தமாக இல்லாமல் இருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பைக் பயணம் செய்வது ஏன் எனக் கேட்டபோது, உலகிலேயே தமிழகம் உள்ளிட்ட இந்திய பசுக்களில் உள்ள பாலில் மட்டும்தான் அதிக சக்தி உள்ளதாகவும், அதற்கு நம் நாட்டின மாடுகள்தான் காரணம் எனவும் தெரிந்துகொண்டேன். இவற்றை அளிக்கவே ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் இனப்பெருக்கத்திற்கு நான்கு பசுக்களுக்கு ஒரு காளை இருந்தது. ஆனால் தற்போது எட்டு பசுக்களுக்கு ஒரு காளைதான் உள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே இருந்த 7 நாட்டு இன காலைகளில் ஒரு இனம் அடியோடு மறைந்து தற்போது 6 காளை இனங்கள்தான் உள்ளன. இதே நிலை நீடித்தால் அதுவும் அழிந்து போதும் சூழல் உருவாகி பால் உற்பத்திக்கு வெளிநாடுகளை நம்பி இருக்கவேண்டிய சூழல் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

எனவேதான் இந்த ஒரு நல்ல செயலுக்காக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.  à®ªà®¿à®©à¯à®©à®°à¯ தான் வாங்கிய கையெழுத்துக்களை பாண்டிச்சேரி முதல்வரிடம் சமர்ப்பித்து ஜல்லிக்கட்டு நடைபெற ஆவன செய்யுமாறு கேட்கப்போவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றால் அது தமிழர்களின் வெற்றியாக அமையும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...