ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மற்றும் குருத்வாரா சிங் சபா இணைந்து கோவையில் சீக்கியர் போர்க்கலை நிகழ்ச்சி

குருகோவிந் சிங்-யின் 350- வது பிறந்தநாளை முன்னிட்டு ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மற்றும் குருத்வாரா சிங் சபா இணைந்து சீக்கியர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கட்கா என்னும் சிறப்பு நிகழ்ச்சி குருத்வாரா அமைப்பினரால் நடத்தப்பட்டது.



கட்கா கலை குறித்து குருத்வாரா சிங் சபாவின் துணைத் தலைவர் குர்ப்ரீத் சிங் கூறுகையில், இந்நிகழ்ச்சியின் நோக்கம் பஞ்சாப்பின் போர்க்கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும். இதற்காக பஞ்சாப்பில் இருந்து 21 கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்கா என்னும் கலையில் நிபுணர்களாவர். சீக்கிய மதத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து கோவை மக்கள் அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது" என்றார்.



கோவையை தங்களது வாழ்விடமாகக் கொண்டு சுமார் 60 சீக்கிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் குருத்வாரா சிங் சபாவில் உறுப்பினர்களாகவும் உள்ளனர். சீக்கிய மதத்தின் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட அவர்கள் ஒன்றிணைந்து 10-வது குருவின் 350-வது பிறந்த நாளை கொண்டாடினர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...