மருத்துவர்களின் அலட்சியத்தால் வாலிபர் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்


கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் மகன் உயிரிழந்ததாகவும், இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் அருகேயுள்ள சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன் பிரதீப் குமார் (20). இவருக்கு இன்று அதிகாலை நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள எல்லன் தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

மருத்துவர் செலுத்த வேண்டிய ஊசியியை செவிலியரை செலுத்துமாறு கூறிவிட்டு மருத்துவர்கள் சென்றுவிட்டதால் பிரதீப்பிற்கு சிறிது நேரத்தில் உடம்பு தூக்கிவாரி போட்டதாகவும், அப்போது செவிலியர்கள் மருத்துவர்களை அழைத்தும் மருத்துவர்கள் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

பிரதீப் என்ன காரணத்தால் அவதிபடுகிறார் என்பது குறித்து மருத்துவர்கள் பரசோதிக்காமல் சென்றுவிட்டதால், சிறிது நேரத்தில் மருத்துவர் ஒரு ஊசி போட்ட பின்னர் பிரதிப்பிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சுயநினைவு இழந்து கீழே விழுந்த நிலையில், பிரத்தீப்பின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறி ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அந்த மருத்துவ அறையில் இருந்த தொலைபேசி, கதவு மற்றும் கண்ணாடியை உடைத்ததுடன் எல்லன் மருத்துவமனையின் நிறுவன மருத்துவர் இராமசந்திரனை தாக்கி உள்ளனர். 

இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்த மருத்துவர்கள் காவலர்கள் உதவியுடன் பிரதீப்பின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிரதீப்பின் பெற்றோர் கூறுகையில், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை காரணமாகவே தன் மகன் உயிரிழந்ததாகவும், சம்பந்தபட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எல்லன் மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கையில், பிரதீப் வாந்தி எடுக்கும் போது மூச்சு குழாயில் உணவு துணுக்குகள்  அடைத்து சுயநினைவு இழந்ததாகவும், அதற்காகவே தீவிர சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதீப்பின் உறவினர்கள் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டதால் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது உறவினர்களும், அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...