எஸ்ஆர்ஐடி வணிகவியல் கல்லூரியின் சார்பில் மேலாண்மை திறன் வளர்ச்சி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம்


எஸ்ஆர்ஐடி வணிகவியல் கல்லூரி சார்பில் ஒரு நாள் மேலாண்மை திறன் வளர்ச்சிக்கான பயிற்சியை ஜனவரி 25ம் தேதி வழங்கப்படவுள்ளது. இதில், இறுதியாண்டு படிக்கும் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவில் இளங்களை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சியானது மாணவர்களின் பணித்திறன், வேலைவாய்ப்புக்கான திறனை மேம்படுத்திக்கொள்வதற்காக அளிக்கப்பட உள்ளது. 

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இப்பயிற்சியில், வேலைவாய்ப்பிற்கான தங்களது விவரங்கள் குறித்த அறிக்கை தயாரிப்பது, மாறுபட்ட சிந்தனை ஊக்குவித்தல், குழு கலந்துரையாடல், அணியாக செயல்படுவது, மற்றும் தலைமை பண்புகள் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளது.

மத்திய அரசின் சார்பில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள எஸ்ஆர்ஐடி கல்லூரியில் செயல்பட்டு வரும் அனுபவத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பயிற்சி பிரிவால் இலவசமாக வழங்கப்படவுள்ளது. 

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் இணையதள தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், பங்குபெரும் மாணவர்களுக்கு பயிற்சிக்கான உபகரணங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு தங்கும் இடமும் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சிக்கு தங்களது கல்லூரி மாணவர்களை அணுப்ப விருப்பமுள்ள கல்லூரி பேராசிரியர்கள், எஸ்ஆர்ஐடி கல்லூரி பேராசிரியர்களான பி.சியாம்சுந்தர்- 9894146967 மற்றும் தீபா சி.குமார்- 8870653740 ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...