ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டிட கழிவுகள் மறுசுழற்சி ஆலைக்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது- மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாநகராட்சியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் ஐந்து மண்டலங்களின் அனைத்து வார்டுகளுக்கும் 100 மெட்ரிக் டன் கொள்ளளவிலான கட்டிட கழிவுகளை கொண்டு மறுசுழற்சி செய்யக்கூடிய ஆலையினை தனியார் பங்களிப்புடன் நிறுவுவதற்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களின் அனைத்து வார்டுகளுக்கும் 100 மெட்ரிக் டன் கொள்ளளவிலான கட்டிட கழிவுகளை கொண்டு மறுசுழற்சி செய்யக்கூடிய ஆலையினை தனியார் பங்களிப்புடன் நிறுவுதல் திட்டப்பணியினை தமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை சிறப்பு நிதியின் கீழ் ரூ.1257.96 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

மேற்கூறிய திட்டப்பணிக்கான கட்டுமான மூலதன செலவான ரூ.9 கோடி தொகை முழுவதினையும் தனியார் முதலீட்டுடன் நிறுவி அதனைத் தொடர்ந்து இயக்குதல் மற்றும் பராமரிப்புகளுக்கான செலவினத்தினை டிப்பிங் கட்டண முறையில் கோவை மாநகராட்சியால் ஏற்கும் வண்ணம் திருத்தி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் மேற்கூறிய திட்டப்பணிக்கு கடந்த 28.10.2016-ல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட பின் மூன்று நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தபுள்ளிகள் பெறப்பட்டதில் தி/ள் நியுவே இன்ஜினீயர்ஸ்  à®Žà®®à¯.எஸ்.டபுள்யு பிரைவேட் லிமிடெட், சென்னை நிறுவனத்தினர் கொடுத்துள்ள குறைவான ஒப்பந்தப்புள்ளியினை மாமன்றத்தின் அனுமதி பெற்று உக்கடம் பகுதியில் அமைந்துள்ள இம்மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பிலான நிலம் 20 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டும், கட்டுமான பணிகள் வெகு விரைவில் துவக்கப்படவுள்ளது. மேலும், அனைத்து பணிகளும் நான்கு மாத காலத்தில் முடிக்கப்படும். 

மேலும், இத்திட்டதில் மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரமாகும் சுமார் 100 மெட்ரிக் டன் கொள்ளளவிலான கட்டிட கழிவுகளை ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள 17 இடங்களில் இம்மாநகராட்சியால் கொண்டு சேர்க்கப்படும். அவற்றினை தனியார் நிறுவனத்தாரால் எடுத்துச் சென்று உக்கடம் பகுதியில் நிறுவப்படும் மறுசுழற்சி ஆலையில் செங்கல், பேவர் பிளாக்குகள் கெர்ப் கற்கள் போன்றவைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படும். 

அதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் சாலையோரங்கள், குளக்கரையோரங்கள், நீர் வழித்தடங்கள், மழை நீர் வடிகால்கள் போன்றவற்றில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவது முழுவதுமாக தடுக்கப்படும். மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தால் இயற்றப்பட்ட கட்டிட கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முழுவதனையும் கட்டிட கழிவு உற்பத்தியாளர்களான பொது மக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் ஆகியோர் பின்பற்றி கோவை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...