குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 151 பயணாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


கோவை மாவட்டம், கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளத்துப்பாளையத்தில் 2017 ஜனவரி 5ம் தேதியன்று தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடு கட்டுவதற்க்கான ஆணை வழங்கும் விழா நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகம், ஊராக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் குளத்துப்பாளையத்தில் 50 நபர்களுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் வீடு கட்டுவதற்கான ஆணையினையும், சுண்டக்காமுத்தூர் பகுதியில் 101 நபர்களுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் வீடு கட்டுவதற்க்கான ஆணையினையும் வழங்கி பேசியதாவது:-

தமிழக முதலமைச்சரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒரு மனைக்கான ஆவணங்கள் வைத்துள்ள நலிந்த வருவாய் பிரிவினர் அனைவருக்கும் வழங்கும் வகையில் திட்டம் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இத்திட்டத்தில் பயன்பெறுவோர் தங்களது குடிசையை அல்லது ஓட்டு வீட்டை அகற்றி 300 சதுர அடி கட்டுமான பரப்பளவிற்கு குறையாமல் கான்கீரிட் தளம் போட்ட வீடு கட்ட அரசு மானியமாக ரூ.2.10 லட்சம் வழங்கி வருகின்றனர். 

அதுமட்டுமின்றி ஏற்கனவே இத்திட்டத்தின் மூலம் வீடுகட்டி இருப்பின் மாடியில் விரிவுபடுத்த ரூ.1.60 லட்சம் அரசு மானியம் வழங்குகிறது. மேலும், வீட்டு மனைப்பட்டா வைத்திருப்பவர்கள் பெரிய வீடு கட்டும் வகையில் குறைந்த வட்டியில் ரூ.6 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் நோக்கம் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே ஆகும். அதனால், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

எனவே, தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" இவ்வாறு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மாவட்ட குடிசை பகுதி மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...