மத்திய அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்து தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர்


500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தது முதல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்னும் ஐம்பது நாட்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

ஐம்பது நாட்கள் முடிவடைந்த நிலையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் தொழில் அமைப்புகள், சிறுகுறு வியபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் மூலம் மத்திய பா.ஜ.க அரசு மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறி இந்திய காங்கிரஸ் கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...