வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளியில் பேருந்துகள் நிறுத்துமிடம் உள்ளது. பேருந்துகள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், உத்தேச பேருந்து திருப்புமுனையம் போதுமான வகையில் பேருந்துகள் இடையூரின்றி நுழையும் வசதி மற்றும் வெளியேறும் வசதி ஏற்படுத்தும் வகையில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து இன்று (06.01.2017) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகிலும் மற்றும் மருதமலை சாலையிலிருந்து உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமையும் நுழைவாயிற் பகுதியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் சர்வே செய்து அப்புறப்படுத்தவும், பேருந்துகள் நுழைவுப் பகுதியிலுள்ள மிகப்பழமையான கழிப்பிடங்களையும் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான சிறு கடைகளையும் அகற்றி மாற்று ஏற்பாடு செய்தும், பேருந்து நிலையம் உள் பகுதியில் நுழைய இடவசதி ஏற்படுத்தும்படியும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...